வரும் 2011ஆம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடியும் வரை ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணியின் தலைவராக ரிக்கி பாண்டிங் நீடிப்பார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைமைத் தேர்வாளர் ஆண்ட்ரூ ஹில்டிட்ச் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அணித் தலைமை குறித்த விவகாரங்களை நாங்கள் யோசித்து வருகிறோம். ஆனால் 2011ஆம் ஆண்டு நடைபெறும் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் வரை அணியின் தலைவராக ரிக்கி பாண்டிங் சிறப்பாக செயல்படுவார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
இதையே அவரும் (பாண்டிங்) விரும்புவார் என்பதால், அணித்தலைமை விவகாரத்தில் பிரச்சனை இல்லை என்றார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாண்டிங் பங்கேற்கவில்லை. மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்ட்ரேலிய அணி 3-2 என்ற போட்டிக்கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
அணியின் துணைத் தலைவராக உள்ள மைக்கேல் கிளார்க்கின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும், தற்போது நிலையில் அவரிடம் ஒருநாள் அணியின் தலைமைப் பொறுப்பை வழங்கும் காலம் இன்னும் வரவில்லை என்றும் ஹில்டிச் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாண்டிங் பங்கேற்காத காரணத்தால், இனி அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே தலைவராக செயல்படுவார் எனச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தனது கருத்தை ஹில்டிச் வெளியிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment